சுடச்சுட

  

  விவசாயிகளுக்கு மண்வள பரிசோதனை அட்டை: ஆட்சியர் வழங்கினார்

  By DIN  |   Published on : 05th September 2016 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்டத்தில் தேசிய மண்வள இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கு மண்வள பரிசோதனைஅட்டைகள் வழங்கும் பணியை ஆட்சியர் எம்.லட்சுமி அண்மையில் தொடங்கி வைத்தார்.
   ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் ராமலிங்கம் பேசியதாவது: தேசிய மண்வள பரிசோதனை இயக்கமானது, பிரதமரால் 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி ராஜஸ்தானில் தொடங்கி வைக்கப்பட்டு, நாடு முழுவதும் செயல்படுத்துப்பட்டு வருகிறது.
   பெருகி வரும் மக்கள் தொகை, அதனால் குறைந்து வரும் சாகுபடி பரப்பு, பருவநிலை மாற்றங்கள் என இக்கட்டான சூழலில் விவசாயத்துக்கு அடிப்படையான மண்ணின் தன்மை, அதில் உள்ள சத்துகளின் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் பயிர்களுக்குத் தேவையான சத்துக்களைச் சரியாகவும், சரிவிகிதமாகவும் அளிக்க வேண்டியது அவசியமாகும்.
   இதன் மூலம் மண்வளம் காப்பதோடு, உரச் செலவினைக் குறைத்து விவசாயிகள் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் செய்யமுடியும். அதன் அடிப்படையிலேயே மண்வள பரிசோதனை செய்து அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் வேளாண்துறை மூலம் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் 85,409 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, இதுவரை 44,401 மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வலைதளத்தில் ஏற்றப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 5,19,000 விவசாயிகளுக்கு மண்வள பரிசோதனை அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் மண்வள அட்டையில், மண்ணின் தரம், கார அமிலத் தன்மை,
   தழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்சத்துக்களின் அளவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
   விவசாயிகள் தங்கள் நிலத்துக்கேற்ப இடவேண்டிய உரங்களின் விவரங்கள், என்னென்ன பயிர்கள் சாகுபடி செய்யலாம் போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும்.
   இதன் மூலம் விவசாயிகள், தங்கள் நிலத்திலுள்ள சத்துகளின் அடிப்படையில் உர மேலாண்மை செய்து, ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கலாம். மேலும் மகசூல் அதிகரித்து வருவாயும் கூடுதலாகப் பெற முடியும்.
   மாவட்டத்திலுள்ள விவசாயிகள், தேசிய மண்வள பரிசோதனை அட்டை இயக்கத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என்றார்.
   வேளாண் துறை அதிகாரிகள் விஜயகுமார், கென்னடி ஜெபக்குமார் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai