சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதல்: 4 பேர் சாவு

    By உளுந்தூர்பேட்டை,  |   Published on : 06th September 2016 10:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திங்கள்கிழமை கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் கார் ஓட்டுநர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
    சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (65). இவர் தனது மனைவி பழனியம்மாள் (57), மகள் தனபாக்கியம் (35), மருமகன் ஆறுமுகம் (43),
    மகன் தினேஷ்குமார் (29), மருமகள் ஜெயந்தி (24), மகன் லோகேஷ்குமார் (28) பேத்தி ஷர்மி (9), பேரன் தர்னேஷ்வர் (8) ஆகியோருடன் காரில் தனது மகன்
    லோகேஷுகுமாருக்கு பெண் பார்க்க நாமக்கல்லுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை புறவழிச் சாலையில் கார் வந்த போது, சென்னையிலிருந்து சேலத்துக்குச் சென்ற அரசுப் பேருந்து கார் மீது
    மோதியது.
    இந்த விபத்தில் பழனியம்மாள், ஜெயந்தி, ஷர்மி மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய 4 பேரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
    காயமடைந்த சந்திரசேகர், தனபாக்கியம், தர்னேஷ்வர், தினேஷ்குமார், லோகேஷ்குமார் ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
    சேர்க்கப்பட்டனர்.
    விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai