சுடச்சுட

    

    எய்ட்ஸ் பாதித்தோருக்கான சிகிச்சை மையம் இட மாற்றம்

    By விழுப்புரம்,  |   Published on : 06th September 2016 10:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கான கூட்டு மருந்து சிகிச்சை மையம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கூட்டு மருந்து சிகிச்சை மையம் நீண்ட காலமாக இயங்கி
    வந்தது. இந்த சிகிச்சை மற்றும் ஆலோசனை மையம் தற்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அனைத்து வசதிகளுடன் இடமாற்றம்
    செய்யப்பட்டுள்ளது.
    அரசு மருத்துவக் கல்லூரியில் இம்மையத்தை திங்கள்கிழமை மருத்துவக் கல்லூரி முதல்வர் பி.வசந்தாமணி திறந்து வைத்தார். 
    நிலைய மருத்துவ அலுவலர் மணிவண்ணன், சிகிச்சை மைய மருத்துவர்கள் சுகந்தன், ரவிராஜ் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
    எச்ஐவி பாதித்த மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் உபகரணங்கள் மற்றும் பாதித்தவர்களுக்கு அனைத்து விதமான பரிசோதனைகளும் இந்த
    மையத்தில் செய்யப்படுகிறது. நோய் பாதித்தவர்களுக்கு மனநல ஆலோசனைகளும் மருத்துவர்களால் வழங்கப்படும்.
    இந்த மையத்துக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் நோயாளிகளுக்கு அரசு சார்பில் இலவச பேருந்து அட்டை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் மாதம்
    ரூ.1,000 உதவித் தொகையும், சிறுவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.2,000 வழங்கப்படுவதாக, இம்மைய மருத்துவர்கள் தெரிவித்தனர்.


     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai