Enable Javscript for better performance
கடலூர் சிறையில் கைதி தூக்கிட்டுச் சாவு: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் சிறையில் கைதி தூக்கிட்டுச் சாவு: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்

    By கடலூர்,  |   Published on : 06th September 2016 10:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மத்திய சிறையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கைதி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மணிகண்டன் (25). இவர் மீது, 3 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் 27ஆம் தேதி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடலூர் அருகே கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் சிறை வளாகத்திலுள்ள கழிவறையில் தனது லுங்கியால் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். தகவலறிந்த சிறைக் காவலர்கள் மணிகண்டனை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக சிறை அலுவலர் (பொ) பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    தொடரும் தற்கொலை: கடலூர் மத்திய சிறையில் கடந்த 6 மாதங்களாக சிறைக் கைதிகள் தற்கொலை, தற்கொலை முயற்சி என 7 சம்பவங்கள்  நடைபெற்றுள்ளன.
    கடந்த 3ஆம் தேதி புதுவையைச் சேர்ந்த கைதி விஜி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai