சுடச்சுட

    

    மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ரயிலடி செல்வ விநாயகர் கோயில், புதிய ரயிலடி விநாயகர் கோயில், கே.கே. நகர் தேரடி விநாயகர் கோயில், பெருமாள்
    கோயில் வீதி, கோட்டை விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோயில்களில் காலை 7 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில்
    ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர்.
    விழுப்புரம் மார்க்கெட் மற்றும் முக்கிய வீதிகளின் சந்திப்புகளில் விநாயகர் சிலை விற்பனையும், விநாயகருக்கான குடைகள், எருக்கம்பூ மாலை, அருகம்புல், பூஜை பொருள்கள் விற்பனை கலைகட்டியது.
    பொதுமக்கள், தங்கள் வீடுகளில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை வைத்து பழங்கள், பொரி, அவுல், கடலை, கொழுக்கட்டை உள்ளிட்ட விநாயருக்குப் பிடித்தமான பொருள்களை படையலிட்டு வழிபட்டனர்.
    பிரம்மாண்ட விநாயகர் சிலைகள்: விழுப்புரம் ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், முத்தோப்பு, திருவிக வீதி, வண்டிமேடு, கீழ்ப்பெரும்பாக்கம் ஆகிய
    நகரின் முக்கிய பகுதிகளிலும், பாணாம்பட்டு, அகரம், ஆனாங்கூர், வி.அரியலூர், கண்டமானடி உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களின் முக்கிய சந்திப்புகளில்
    பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது.
    விழுப்புரம் வட்டத்தில் 334 சிலைகளும், திண்டிவனத்தில் 287 சிலைகளும், செஞ்சியில் 473, திருக்கோவிலூரில் 364, கோட்டக்குப்பத்தில் 208,
    கள்ளக்குறிச்சியில் 361, உளுந்தூர்பேட்டையில் 549 என மாவட்டம் முழுவதும் 2,576 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, மாலை 6
    மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு விநாயகர் உற்சவர் வீதி உலா நடைபெற்றது. விநாயகர் சிலை வழிபாட்டுத் தலங்களில் போலீஸ் பாதுகாப்பும்
    போடப்பட்டுள்ளது.
    செஞ்சி...
    செஞ்சி சிறுகடம்பூர் செல்வ விநாயகர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 21 அடி விநாயகர் சிலைக்கு சிறப்பு யாகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
    இதனைத் தொடர்ந்து உற்சவர் வீதியுலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். இதேபோல் செஞ்சி
    பெரியகரம், சிறுகடம்பூர் காலனி, கிருஷ்ணாபுரம், தேசூர்பாட்டை, பீரங்கிமேடு, சஙகராபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.  
    திருக்கோவிலூர்...
    திருக்கோவிலூர் - கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகருக்கு தொடர்ந்து 10 நாள்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், கலச ஸ்தாபனம், மகா கணபதி ஆவாஹனம்,
    பஞ்சாசன ஆவர்ண பூஜைகள், மகா அபிஷேகம் நடைபெற்றது. 
    மாலை 6 மணிக்கு சோடசோபஹார தீபாராதனை நடைபெற்று, உற்சவர் விநாயகர் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
    கள்ளக்குறிச்சி...
    கள்ளக்குறிச்சி கவரைத் தெருவில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அர்ச்சனை, தீபாராதனை
    காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் காலை 5 மணி முதலே சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை
    நடைபெற்றது. 
    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர். இதேபோல் கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம், கீழ்க்குப்பம்,
    கச்சிராயப்பாளையம், கரியாலூர், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு
    சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai