சுடச்சுட

    

    அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள விநாயகருக்கு திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலை சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.
     இதேபோல, அனைத்து கோயில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
     அவலூர்பேட்டை முருங்கமர தெருவில் 26 ஆம் ஆண்டு சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு காலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
     இங்கு இரவு 8 மணிக்கு விநாயகர் பெருமை பற்றி அவலூர்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் புருசோத்தமன், துணைச் செயலர் சிவநேசன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
     மேலும், நகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப் பெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai