சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தியையடுத்து, சிலைகள் விசர்ஜன ஊர்வலம் இன்று தொடங்குகிறது. கடற்கரை, அணைகள் உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட இடங்களில் சிலையை கரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தி விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும், 2,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
     இதைத்தொடர்ந்து, வீடுகளில் உள்ள விநாயகர் சிலைகள், பொது இடங்களில் வைத்துள்ள பிரமாண்ட விநாயகர் சிலைகள், புதன்கிழமை மாலை தொடங்கி விசர்ஜன ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.
     விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்களையும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வீடூர் அணை, அவலூர்பேட்டை ஏரி, மரக்காணம்-கோட்டக்குப்பம் கடற்கரைப் பகுதி, சங்கராபுரம் ஏரி, அரகண்டநல்லூர் ஏரி மற்றும் அதுல்யநாதேஸ்வரர் கோயில் குளம், கோமுகி அணை, சின்னசேலம் ஏரி, உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் ஏரி, திருநாவலூர் ஏரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     பொதுமக்கள் செப்.7-ஆம் தேதி தொடங்கி செப். 15-ஆம் தேதி வரை தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் சிலைகளை எடுத்துச் சென்று, நீர்நிலைகளை மாசுபடுத்தாதவாறு கரைக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai