Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவினர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவினர் ஆலோசனை

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 07th September 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தியாகதுருகம் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் பிரிதிவிமங்கலம் ஊராட்சி சமுதாயக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     ஒன்றியச் செயலர் வெ.அய்யப்பா தலைமை வகித்தார். நகரச் செயலர் பி.எஸ்.கே.ஷியாம் சுந்தர், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலர் எஸ்.ஜான்பாஷா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் அ.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ கோமுகி.மணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணிச் செயலர் சாமிதுரை வரவேற்றார். கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அ.பிரபு பங்கேற்று பேசுகையில், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது குறித்து வலியுறுத்தினார்.
     ஒன்றிய மாணவரணி பொருளர் பழனிவேலு, இலக்கிய அணிச் செயலர் குமரவேலு, துணைச் செயலர் வரதாம்பாள் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     இதேபோல், கள்ளக்குறிச்சி ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பச்சையாப்பிள்ளை, ஒன்றியக்குழு துணைத் தலைவர் மு.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     ஒன்றியச் செயலர் அ.ராஜசேகர் பங்கேற்று பேசுகையில், புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் கட்சியினர் மும்முரமாக ஈடுபட வேண்டும். உயிரிழந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் வரும் 11, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்றார்.
     கூட்டத்தில் ஒன்றியக் கவுன்சிலர்கள் து.ராயப்பன், க.மணி மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிளைக்கழக செயலர்கள், கூட்டுறவு வங்கித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai