சுடச்சுட

    

    கஞ்சனூர் துணை மின் நிலையத்தில் செப்.7 முதல் செப்.9 வரை திறன் மின்மாற்றியில் தொடர் பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது.
     மேலும், செப்.9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒட்டுமொத்த பராமரிப்புப் பணியும் நடைபெற உள்ளது.
     இதனால் கஞ்சனூர், நேமூர், தும்பூர், வேம்பி, அசோகபுரி, அன்னியூர், கெடார், சங்கீதமங்கலம், முட்டத்தூர், ஒரத்தூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில், மூன்று நாள்களும் காலை
     6 மணி முதல் சுழற்சி முறையில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை மும்முனை மின்சாரமும், மின் விநியோகமும் தடைபடும்.
     இதேபோல, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மின்சுமைக்கு தகுந்தாற்போல மின் தடை ஏற்படும்.
     செப்.9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முழு பராமரிப்பு காரணமாக, முழுவதும் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai