சுடச்சுட

    

    கண்டமங்கலம் அருகே வீடு புகுந்து நகைகள் திருட்டு

    By விழுப்புரம்,  |   Published on : 07th September 2016 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கண்டமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
     கண்டமங்கலம் அருகே உள்ள கலிங்கமலை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன் மனைவி காவேரி (58). இவர் திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிக் கொண்டு, தனது தாயுடன் வீட்டின் முன்புள்ள வராந்தாவில் படுத்துத் தூங்கினார்.
     நள்ளிரவில் மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்கக் கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்து, அறையில் பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், கம்மல் உள்ளிட்ட 8 பவுன் தங்க நகைகளையும், வெள்ளிப் பொருள்களையும் திருடிச் சென்றனர்.
     செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பார்த்த காவேரி தங்க நகைகள் திருடப்பட்டதை அறிந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai