Enable Javscript for better performance
கருக்கலைப்பு முயற்சி: பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சி அருகே 5 மாத கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றபோது செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார்.
     செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி அருகே உள்ள வி.நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணி. இவரது மனைவி பத்மாவதி (35). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பத்மாவதி 3ஆவது முறையாக கருவுற்றார்.
     கடந்த 10 நாள்களுக்கு முன்பு பத்மாவதி கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ரத்தப்போக்கு அதிகமாகவே, ஆலம்பூண்டி-தேவதானம்பேட்டை சாலையில் உள்ள பெயர் தெரியாத நபர் வீட்டில் கருக்கலைப்பு செய்யும் போது பத்மாவதியும், சிசுவும் உயிரிழந்தனர். இதையடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
     சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai