சுடச்சுட

  

  பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

  By செஞ்சி/திருக்கோவிலூர்,  |   Published on : 07th September 2016 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
   வல்லம் ஊராட்சி ஒன்றியம், சின்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் சிவ.தீபலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தேசிய நல்லாசிரியரும், பட்டிமன்ற பேச்சாளருமான செஞ்சி கந்தசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
   மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் சிறப்புகள் குறித்து உரையாற்றினர். சிறப்பாக உரை நிகழ்த்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்தும், பரிசுகள் வழங்கியும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். சுசித்ரா நன்றி கூறினார்.
   திருக்கோவிலூர்: ரிஷிவந்தியத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. ரோஸ் எட் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் எம்.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஆசிரியை தி.ஞானசெல்வி வரவேற்றார்.
   விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.பிரகாஷ், ஆசிரியர் சிறப்புப் பயிற்றுநர் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் பேசினர்.
   ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், தமிழ்ச் சங்கத் தலைவருமான சு.ராஜேந்திரன் பங்கேற்று ஆசிரியர்களை பாராட்டி பேசினார்.
   இதேபோல், திருக்கோவிலூர்-சீலோவாம் பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
   தாளாளர் டி.வினோத்குமார் தலைமை வகித்தார். விடுதி மேலாளர் ஜென்அனிதா, பள்ளி மேம்பாட்டுத் திட்டத் தலைவர் தெய்வந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை ஜூலிதேவசேனா வரவேற்றார்.
   சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.ராதாகிருஷ்ணன், அருட்கவிஞர் அருள்நாதன் தங்கராசு, மக்கள் பாடகர் தேசப்பிரியன் ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் குறித்துப் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
   இப்பள்ளியில் பணிபுரியும் 40 ஆசிரியர்களுக்கு ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.ராஜேந்திரன் ரூ.20 ஆயிரம் மதிப்பில் நினைவுப் பரிசுகளும், சிறப்பாக நடனமாடிய மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும் வழங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் கிளிபோர்டுகுமார் நன்றி கூறினார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai