Enable Javscript for better performance
பைக் மோதியதில் விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கண்டமங்கலம் அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
     கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (58). விவசாயி. இவர் திங்கள்கிழமை பக்கிரிப்பாளையம் வரை சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
     பக்கிரிப்பாளையம் சாலை சந்திப்பிலிருந்து, சைக்கிளில் விழுப்புரம்-புதுவை நெடுஞ்சாலையை அவர் கடக்க முயன்ற போது, நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் அவர் மீது மோதினார். இந்த விபத்தில், தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai