சுடச்சுட

    

    அமைச்சரிடம் டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை மனு

    By விழுப்புரம்,  |   Published on : 08th September 2016 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் மூடப்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிற துறைகளில் பணி வழங்க வேண்டும் என அச் சங்கத்தினர் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
     தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு அண்மையில் விழுப்புரத்தில் நடைபெற்றது.
     இதில், அரசுக்குப் பெரும் வருவாய் ஆதாரமாக விளங்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் இயங்கும் மதுபானக் கடைகளை மக்கள் நலன் கருதி படிப்படியாக மூடுவது என்ற தமிழக அரசின் முடிவை மாநாடு வரவேற்கிறது.
     அதேவேளையில் டாஸ்மாக் நிறுவனத்தில் சிறு சிறு குற்றங்களுக்காக பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து நிலைப் பணியாளர்களையும் பணியில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளைப் படிப்படியாக மூடும்போது, அதில் பணியாற்றும் பணியாளர்களை, கல்வித் தகுதியின் அடிப்படையில், பிற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
     இக் கோரிக்கைகளை மனுவாக, அண்மையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் தங்கமணியை நேரில் சந்தித்து சங்கத்தினர் வழங்கினர்.
     சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன், தலைவர் கு.பால்பாண்டியன், பொதுச் செயலர் பழனிபாரதி, மாநிலப் பொருளர் ஜெயகனேஷ், கோதண்டம், காமராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai