சுடச்சுட

  

  திண்டிவனம் அருகே விபத்து நஷ்ட ஈடு வழங்காத அரசு விரைவுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
   கடந்த 2008, ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி, மரக்காணம் பகுதியைச் சேர்ந்த பாபுவுடன், அதே பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (53) பைக்கில் அமர்ந்து சென்றார். மரக்காணம் பகுதியில் இவர்களுக்குப் பின்னால் வந்த அரசு விரைவுப் பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். வழக்கு திண்டிவனம் 2-ஆவது மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்த மோகன்குமாருக்கு ரூ. 28,000 நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் கடந்த 2011, ஜூலை மாதம் உத்தரவிட்டது.
   நஷ்ட ஈடு வழங்காத நிலையில், தீர்ப்பு நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி செல்வமுத்துகுமாரி, வட்டியுடன் சேர்த்து ரூ. 45,716 நஷ்ட ஈடு வழங்கவும், பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்ட நிலையில், அரசு விரைவுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai