சுடச்சுட

  

  செஞ்சி அருகே 5 மாத கர்ப்பிணிக்கு கருகக்லைப்பு செய்ய முயன்றதால் செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்தார். கருக்கலைப்பு செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
   ஆலம்பூண்டியை அடுத்த வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்த ரமணி மனைவி பத்மாவதி (35). இவருக்கு 8-ஆம் வகுப்பு, மற்றும் 6-ஆம் வகுப்பு படிக்கும் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
   இந்நிலையில் 3-ஆவது முறையாக கருவுற்றிருந்த பத்மாவதி, கடந்த 10 நாள்களுக்கு முன் கருகலைப்பு மாத்திரை உட்கொண்டதாகத் தெரிகிறது.
   இதனால் அவருக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, ஆலம்பூண்டி தேவதானம்பேட்டை சாலையிலுள்ள பாஸ்கரன் மனைவி சுசீலா (39) வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்டதாம். அதனால் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது.
   இது குறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர்.
   விசாரணையில் சுசீலா வீட்டில் கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் சுசீலாவை கைது செய்தனர். தலைமறைவான சுசீலாவின் கணவரைத் தேடி வருகின்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai