சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி நகரில் தொடர் திருட்டு

    By கள்ளக்குறிச்சி,  |   Published on : 08th September 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி நகரில் வழிப்பறிக் கொள்ளை, சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே, மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க அதிக அளவில் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
     கள்ளக்குறிச்சி நகரில் சுமார் 70,000 மக்களும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60,000-க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.
     கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் 75 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் டிஐஜி, எஸ்பி அலுவலகம், சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, காவல் நிலையத்தில் 30 போலீஸாரே பணிபுரிந்து வருகின்றனர். இதிலும் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் நீதிமன்றங்கள், நிலைய காவல் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
     ஆக, நகர் முழுமைக்கும் 20 போலீஸார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
     கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் குற்றப் பிரிவுக்கென தனி காவல் ஆய்வாளரோ, உதவி ஆய்வாளரோ கிடையாது. குற்றப் பிரிவுக்கு 4 போலீஸார் மட்டுமே உள்ளனர். குற்றப் பிரிவு போலீஸார் பகல் - இரவு நேரங்களில் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டால்தான் குற்றச் சம்பவங்களைத் தடுக்கமுடியும். போதிய போலீஸார் இல்லாததால் ரோந்துப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
     இதனால் வழிப்பறி, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு, திருவிழாவில் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
     கள்ளக்குறிச்சி நகரில் 2 மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடத்தில் வழிபறிக் கொள்ளை, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, மோட்டார் சைக்கிள் திருட்டு, கோயில் திருவிழாக்களில் பெண்களிடமிருந்து சங்கிலி பறிப்பு, கோயில் உண்டியல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
     திருட்டுச் சம்பவங்களுக்குக் காரணம், போலீஸார் பற்றாக்குறையே என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே நகரிலும் அதனைச் சுற்றியுள் பகுதிகளிலும் கூடுதலான காவல் துறையினரை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai