Enable Javscript for better performance
காலிப் பணியிடங்களை நிரப்ப மின்வாரிய தொமுச வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காலிப் பணியிடங்களை நிரப்ப மின்வாரிய தொமுச வலியுறுத்தல்

    By விழுப்புரம்,  |   Published on : 08th September 2016 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் சிறப்பு வாயிற் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
     மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் திட்டத் தலைவர் பி.சண்முகம் தலைமை வகித்தார். திட்டச் செயலர் சு.வேல்முருகன் வரவேற்றார்.
     மாநிலப் பொருளர் மு.சடாச்சரம், துணைத் தலைவர்கள் கோ.வேல்முருகன், என்.சிவக்குமார், தொழிலாளர் நலச் செயலர் கோ.கண்ணன், பிரசார செயலர் எம்.மனோகர், செயலர்கள் டி.முரளிகுமார், ஆர்.குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் சிங்கார.ரத்தினசபாபதி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
     மின்வாரியத்தில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.
     ஊழியர்களுக்கு கடந்த 2015-முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு குறித்து, தொழிற்சங்கங்களை அழைத்துப் பேச வேண்டும்.
     ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. திட்டப் பொருளர் எஸ்.பன்னீர் நன்றி கூறினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai