Enable Javscript for better performance
நீடித்த வேளாண் தேசிய திட்டம்: விவசாயிகள் பயன்படுத்த அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    நீடித்த வேளாண் தேசிய திட்டம்: விவசாயிகள் பயன்படுத்த அறிவுரை

    By விழுப்புரம்,  |   Published on : 08th September 2016 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் மானாவாரி பகுதி விவசாயிகள் மேம்பாட்டுக்கு, மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தி வரும் நீடித்த வேளாண் தேசிய இயக்கத் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.
     வேளாண் இணை இயக்குநர் ராமலிங்கம் தலைமை வகித்தார். விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் பங்கேற்று, 50 சதவீதம் மானியத்தில், விவசாயிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினார்.
     தொடர்ந்து அவர் பேசியதாவது: விவசாயிகளின் வருவாய் அதிகரித்தால்தான் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். நமது நாட்டில் 50 சதவீதத்துக்கு மேல் மானாவாரி சாகுபடி நடைபெறுகிறது.
     இவ்வாறான சாகுபடியில் விவசாயிகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயிர் செய்ய முடியும். அதனால், விவசாயிகளுக்கும். அத்தொழில் சார்ந்த பணியாளர்களுக்கும் ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பதில்லை. எனவே, மானாவாரி பகுதியில் வாழும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட, தமிழக முதல்வர் இது போன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.
     இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கறவை மாடுகள், ஆடுகள், இடுபொருள்கள் வழங்கப்படுகிறது. கால் நடைகளுக்குத் தேவையான தீவன உற்பத்தியை விவசாயிகளின் நிலத்திலேயே செய்திட பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால், இயற்கை பண்ணை சாகுபடி முறைகள் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்படும். எனவே, இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
     வேளாண் துணை இயக்குநர் இளவரசன், உதவி இயக்குநர் கென்னடி, ஊராட்சித் தலைவர்சித்ரா, வேளாண் கடன் சங்கத் தலைவர் பிரேம்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai