சுடச்சுட

    

    பணம் வாங்கி ஏமாற்றியதாக வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பும் முகவரை கடத்தி தாக்குதல்

    By விழுப்புரம்,  |   Published on : 08th September 2016 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூர் அருகே வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக, முகவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     சங்கராபுரம் பூட்டைரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (50) (படம்). வெளிநாட்டுக்கு ஆள்களை அனுப்பி வைக்கும் தனியார் ஏஜென்சியின் முகவர். இவர், தனது உறவினரான தேவியகரத்தைச் சேர்ந்த முருகன், தி.கீரனூரைச் சேர்ந்த தங்கதுரை, வேலூரைச் சேர்ந்த ஏழுமைல ஆகியோரை மொரிசியஸ் நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, பணத்தை வாங்கிக் கொடுத்திருந்தாராம்.
     சென்னையைச் சேர்ந்த ஏஜென்சியின் உரிமையாளர் செல்வம், இவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால், விரக்தியடைந்த பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் முகவர் முருகனிடம் பணம் கேட்டு வந்துள்ளனர்.
     பணத்தை அவர் திரும்பக் கொடுக்காததால், கடந்த செப். 2-ஆம் தேதி, பூட்டையில் வீட்டிலிருந்த முருகனை, தேவியகரம் முருகன், ஏழுமலை உள்ளிட்டோர் வெளியே அழைத்துச் சென்றனராம். அதன்பிறகு முருகன் வீடு திரும்பவில்லையாம்.
     பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அச்சமடைந்த அவரது மனைவி உமா(43) திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதந்து, முருகனை தேடி வந்தனர்.
     இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, காணையில் மயங்கி கிடந்த முருகனை அப்பகுதி மக்கள் மீட்டு, போலீஸில் ஒப்படைத்தனர். பின்னர், விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முருகனிடம், ஏடிஎஸ்பி ராஜசேகரன் விசாரணை நடத்தினார்.
     அப்போது அவர் கூறியது: சென்னையில் உள்ள செல்வத்தின் ஏஜென்சி மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதற்காக அவரது மகன் உள்ளிட்ட 5 பேரிடம் தலா ரூ. 30 ஆயிரம் பணம் வாங்கிக் கொடுத்தேன். செல்வம் ஏமாற்றிவிட்டார்.
     ஆனால், பணம் கொடுத்த எனது உறவினர் முருகன் உள்ளிட்டோர் என்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தினர்.
     அங்கிருந்து கடத்திச் சென்று தனிமையில் வைத்து தாக்கியதோடு, எனது சொத்தையும் எழுதி வாங்க முயற்சித்தனர் என புகார் தெரிவித்தார்.
     இது குறித்து, திருக்கோவிலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai