சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் அருகே பயிற்சிக் காவலர் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
     திருநாவலூர் ஒன்றியம், ஒடப்பன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜம்புலிங்கம் மகன் மணிவேல். காவல் துறையில் சேர்ந்த இவர், திருச்சியில் பயிற்சி பெற்று வந்தார்.
     இந்நிலையில் அவருக்கு சில மாதங்களுக்கு முன், கால் முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வந்த மணிவேலுக்கு, மீண்டும் சென்னையில் பயிற்சி பெறுவதற்கான கடிதம் வந்துள்ளதாகத் தெரிகிறது.
     இதனையடுத்து, அவரது பெற்றோர் மணிவேலுவை சென்னைக்கு சென்று பயிற்சியில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. கால் முறிவால் அவதிப்பட்டு வந்த மணிவேல், வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தியதால், மனவேதனை தற்கொலை செய்துகொண்டாராம்.
     இது குறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீஸார் மணிவேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட பயிற்சிக் காவலர் மணிவேலுக்கு மனைவியும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai