Enable Javscript for better performance
புதை சாக்கடை குழாய் அடைப்பு: சீரமைப்புப் பணிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    புதை சாக்கடை குழாய் அடைப்பு: சீரமைப்புப் பணிகள் தீவிரம்

    By விழுப்புரம்  |   Published on : 08th September 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் புதை சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பினை புதன்கிழமை நகராட்சி ஊழியர்கள் சீரமைத்தனர்.
     நகரில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், புதை சாக்கடை குழாய்களில் அடைப்பு போன்றவற்றால் சில இடங்களில் கழிவு நீர் வெளியேற்றம் பாதித்து, சாலைகளில் வழியும் நிலை ஏற்பட்டது.
     குறிப்பாக, நான்கு முனை சாலை சந்திப்பு பகுதியில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, சுற்றுப் பகுதியிலிருந்து செல்லும் கழிவு நீர் வெளியேறாமல் பல இடங்களில் தேங்கி மேலே வழிந்தோடியது.
     இதனையடுத்து, நகராட்சி பொறியியல் துறையினர், புதை சாக்கடை குழாய் அடைப்பை நீக்க நடவடிக்கை எடுத்தனர். நான்கு முனை சந்திப்பு சாலையில் உள்ள ஆளிறங்கு குழாய் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு, அதன் வழியாக காக்குப்பும் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் பிரதான புதை சாக்கடைக் குழாய் அடைப்பைச் சரி செய்யும் பணி நடைபெற்றது. இப்பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கழிவுநீர் வழிந்தோடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இப்பகுதியில் புதை சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, சாக்கடை நீர் வெளியேறாமல் இருந்தது. அங்கு நவீன இயந்திரம் மூலம் அடைப்பை நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் சரி செய்யப்படும் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai