சுடச்சுட

  

  விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 2,300 விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு புதன்கிழமை கடல், அணை, ஏரிகளில் கரைக்கப்பட்டன.
   விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும், 2,600-க்கும் மேற்பட்ட இடங்களில், பிரமாண்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பொதுமக்கள் வழிபட்டனர்.
   விநாயகர் வழிபாடுகளைத் தொடர்ந்து, வீடுகளில் உள்ள விநாயகர் சிலைகள், பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், மூன்றாம் நாளான புதன்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
   விழுப்புரத்தில் நேரு வீதியிலிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. எம்ஜி சாலை, காமராஜர் வீதி, திருவிக வீதி, கிழக்குப் பாண்டி சாலை வழியாக, மேள தாளங்கள் முழங்க, அணிவகுத்துச் சென்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் இந்து முன்னணியினர், உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்து சிலைகளை வேன், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் வைத்து கொண்டு சென்றனர்.
   விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலிருந்து சுமார் 300 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சிலைகள், கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு கடலில் கரைக்கப்பட்டது.
   உளுந்தூர்பேட்டையில்...
   உளுந்தூர்பேட்டை வட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட 52 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மணிக்கூண்டு திடலுக்கு கொண்டு வரப்பட்டு, முருகன் கோயில் முன் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
   பின்னர், முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, சேலம் சாலையில் உள்ள கீரனூர் ஏரியில் கரைக்கப்பட்டன.
   கள்ளக்குறிச்சியில்...
   கள்ளக்குறிச்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் புதன்கிழமை யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காந்தி சாலை, கச்சேரி சாலை, கவரைத் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்று கச்சிராயப்பாளையம் கோமுகி அணையில் கரைக்கப்பட்டன.
   வரஞ்சரம், சின்னசேலம், கீழ்க்குப்பம், கச்சிராயப்பாளையம், கரியாலூர், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 410 விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அந்தந்த பகுதிகளில் உள்ள அணை, ஏரி, குளங்களில் கரைக்கப்பட்டன.
   இதேபோல் செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விடூர் அணை, அவலூர்பேட்டை ஏரி, மரக்காணம், கோட்டக்குப்பம் கடற்கரை பகுதி, சங்கராபுரம் ஏரி, அரகண்டநல்லூர் ஏரி, கோயில் குளம், திருநாவலூர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
   சிலை ஊர்வலத்துக்கு போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai