Enable Javscript for better performance
அனந்தபுரத்தில் உலக எழுத்தறிவு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் உலக எழுத்தறிவு தினம் உமையாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
    ரோட்டரி சங்கத் தலைவர் அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தார். செயலர் வா.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். எழுத்தறிவு தின நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் அமுதா தொடங்கி வைத்து, எழுத்தறிவு பெறுவதன் அவசியம் குறித்த கதைகள், பாடல்கள் மூலம் எடுத்து கூறி சிறப்புரையாற்றினார்.
    தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் எழுது பொருள் உள்ளிட்ட கல்வி உபகணரங்கள் வழங்கப்பட்டன.
    ரோட்டரி சங்க துணைத் தலைவர் அலில், துணைச் செயலர் பாபு, ருத்ரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai