Enable Javscript for better performance
ஆசிரியரை ஏமாற்றி காரிலிருந்த 40 பவுன் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரத்தில் துணிக்கடைக்கு வந்த ஆசிரியரை நூதனமாக ஏமாற்றி காரிலிருந்த 40 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் சலீம்பாபு (47). பெரம்பலூர் மாவட்டம், வடக்கலூர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர், சனிக்கிழமை தனது காரில் பெரம்பலூர், லப்பைக்குடிகாடு பகுதியிலுள்ள தனது சகோதரி வீட்டின் கிரகப்பிரவேசத்துக்கு குடும்பத்தினருடன் சென்றார். இரவு, தனது வீட்டுக்குப் புறப்பட்ட அவர், வரும் வழியில் விழுப்புரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள துணிக் கடைக்கு, காரை வெளியே நிறுத்திவிட்டு, சகோதரி மற்றும் அவரது மகன் ஆகியோரை கடைக்கு அனுப்பிவிட்டு, சலீமாபாபு காரில் காத்திருந்தார்.
    அப்போது கார் அருகே வந்த இளைஞர் ஒருவர், காரின் கண்ணாடியைத் தட்டிக் கூப்பிட்டு, பணம் கீழே கிடப்பதாக கூறியுள்ளார். உடனே கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு ரூ. 100 தாள்கள்
    சிதறிக் கிடந்துள்ளன.
    காரின் கதவை மூடிவிட்டு, கடையின் எதிரே நின்றிருந்த பாதுகாவலரிடம் பணம் சிதறிக் கிடப்பது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர், காருக்கு வந்து பார்த்தபோது, காரின் பின் பக்க கதவைத் திறந்து, உள்ளே பையில் 40 பவுன் நகை, ரூ. 15,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai