சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை அருகே வைகோவின் கார் மோதி விவசாயி சாவு

    By DIN  |   Published on : 11th September 2016 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை அருகே, மதிமுக பொதுச்செயலர் வைகோவின் கார் மோதியதில், விவசாயி உயிரிழந்தார். இதனைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராயர் மகன் சக்திவேல் (45). இவர், சனிக்கிழமை வயலுக்குச் சென்று, மீண்டும் இரவு வீட்டுக்குத் திரும்பினார்.
    வண்டிப்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே சாலையோரம் வந்த இவர், வீட்டுக்கு செல்ல சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவர் மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சொகுசு கார் மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தார். அப்போது, அங்கு திரண்ட உறவினர்கள், விபத்தைக் கண்டித்தும், அவசர ஊர்தி வர தாமதமானதைக் கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், திருநாவலூர் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதனையேற்று மறியலை மக்கள் கைவிட்டனர். இந்த மறியலால், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான சொகுசு கார் மதிமுக பொதுச் செயலர் வைகோவின் கார் என்றும், அதில், அவரது உதவியாளர், பாதுகாவலர்கள் சென்றதாகவும் போலீஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai