Enable Javscript for better performance
மருத்துவ பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சிப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் அண்மையில் நடைபெற்றது.
    கோலியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற முகாமுக்கு, விக்கிரவாண்டி ஒன்றிய மருத்துவ அலுவலர் பிரேமா தலைமை வகித்தார். மருத்துவர்கள் அஞ்சலி, ஜேம்ஸ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
    இதய நோய், தோல் நோய், தொடர் நோய் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் உடல் எடை பரிசோதிக்கப்பட்டு, உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
    இதேபோல் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், விழுப்புரம் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி நகர்புற சுகாதார பயிற்சி மையம் சார்பில், மருத்துவ அலுவலர் சுகுணா தலைமையில் மருத்துவர்கள் அருள்மொழி, பிரவீன், பிரசாத், விஷ்ணுப்பிரியா உள்ளிட்ட குழுவினர் மாணவ, மாணவிகளை பரிசோதித்து சிகிச்சையளித்தனர்.
    தலைமை ஆசிரியர் லட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai