சுடச்சுட

    

    விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
    வி.சாத்தனூரைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் மின் விளக்குக்கான சுவிட்சை போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் முருகன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
    இது குறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பைக் சக்கரத்தில் சேலை
    சிக்கி விபத்து: பெண் சாவு
    விழுப்புரம், செப். 10: விக்கிரவாண்டி அருகே பைக் சக்கரத்தில் சேலை சிக்கியதால் கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.
    திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி ரீனா (25). இவர், தனது கணவருடன் வியாழக்கிழமை இரவு வி.சாலையில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றனர். அங்கிருந்து மீண்டும் அவர்கள் ரெட்டணைக்குத் திரும்பினர்.
    விழுப்புரம்-சென்னை நெடுஞ்சாலையில், வி.சாலை அருகே வந்தபோது பைக் பின் சக்கரத்தில் ரீனாவின் சேலை சிக்கியதால் அவர் கீழே விழுந்து காயமடைந்தார். உடனே அவரை மீட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து, விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai