சுடச்சுட

  

  முன்னறிவிப்பின்றி கடவுப்பாதையில் பராமரிப்புப் பணி: வாகன ஓட்டிகள் அவதி

  By DIN  |   Published on : 11th September 2016 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் அருகே கோலியனூர் ரயில்வே கடவுப்பாதை பராமரிப்புப் பணிக்காக முன்னறிப்பின்றி மூடப்பட்டதால், சென்னை - கும்பகோணம் மார்க்கமாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
  சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலையில், விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர் ரயில்வே கடவுப்பாதையில் தண்டவாளத்துக்கு அடித்தளம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
  இதன் காரணமாக ரயில்வே கடவுப்பாதை மூடப்பட்டதால், சென்னை மார்க்கத்திலிருந்து வந்த வாகனங்கள் விழுப்புரம் சாலையில் திருப்பிவிடப்பட்டு கோலியனூர், பாணாம்பட்டு வழியாக பண்ருட்டி சாலையில் சென்றன.
  இதேபோல் கும்பகோணம் மார்க்கத்திலிருந்து வந்த வாகனங்களும், பாணாம்பட்டு, விழுப்புரம் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, மாற்றுச் சாலையில் சென்றன.
  கடவுப்பாதை சீரமைப்புப் பணி இரவு தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
  முன்னறிவிப்பு அவசியம்: இந்தக் கடவுப்பாதையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சீரமைப்புப் பணி நடைபெற்றது. மீண்டும் அதே பாதையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சீரமைப்புப் பணி நடைபெற்றுள்ளது.
  இவ்வாறு சீரமைப்புப் பணி நடைபெறும்போது, செய்தித்தாள்கள், ஊடகங்கள் வாயிலாக முன்கூட்டியே தகவல் தெரிவித்தால், நீண்ட தொலைவிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் விழிப்புடன் அவதியின்றி மாற்றுச் சாலையில் பயணத்தை மேற்கொள்வார்கள் என்பதை ரயில்வே நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் தெரிவித்
  தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai