சுடச்சுட

    

    ரூ.20 லட்சம் முறைகேடு புகார்: கூட்டுறவு வங்கித் தலைவர், செயலர் கைது

    By DIN  |   Published on : 11th September 2016 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டிவனம் அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.20 லட்சம் அளவில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், வங்கித் தலைவர், செயலர் கைது செய்யப்பட்டனர்.
    நொளம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடந்தாண்டு முறைகேடு புகார் எழுந்தது. இது குறித்து, திண்டிவனம் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ரகு தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.
    அதில், கடந்த 2013 ஜூலை முதல் 2014 ஜூலை வரை, வங்கிக் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. வாடிக்கையாளர்களின் குறுகிய காலக்கடன் குறித்து பதிவு செய்யாமலும் நகைக்கடன் போன்ற பல்வகை கடன்களுக்கு வட்டி செலுத்துவதை வரவில் வைக்காமலும் ரூ.19.51 லட்சம் அளவில் வங்கிப் பணத்தை முறைகேடு செய்திருந்தது தெரியவந்தது.
    இதையடுத்து அந்த வங்கியின் செயலர் கந்தசாமியை (53) துணைப் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்தார். மேலும் இது தொடர்பாக, விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி விழுப்புரம் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வுத் துறையிலும் அண்மையில் புகார் அளித்தார். இதன் பேரில், வணிக குற்றப்புலனாய்வுத் துறை போலீஸார் வங்கிச் செயலர் கந்தசாமி, வங்கியின் தலைவர் ஜெயபாலன் (60) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
    இதனையடுத்து, இருவரும் திண்டிவனம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில், உடல் நலம் பாதிக்கப்பட்ட வங்கித் தலைவர் ஜெயபாலன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இதனையடுத்து அவருக்கு, திண்டிவனம் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai