சுடச்சுட

    

    வாகனங்களில் எரிபொருள் திருடுவதைத் தடுக்க புதிய கருவி

    By DIN  |   Published on : 11th September 2016 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலம் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் மாதவன், மணிகண்டன், கமல்ராஜ் ஆகியோர் இணைந்து வாகனங்களில் எரிபொருள் திருடுவதைத் தடுக்கும் புதிய கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
    இன்றைய காலகட்டத்தில் எரிபொருளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
    அதிக விலை கொடுத்து வாங்கப்படும் எரிபொருள் வாகனங்களில் திருடு போவதும் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களில் இருந்து எரிபொருள் திருட்டைத் தடுக்கும் விதமாக மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
    ரூ. 250 செலவில் மைக்ரோ கண்ட்ரோலர் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவியின் செயல்பாட்டை, கல்லூரி முதல்வர் செந்தில், துறைத் தலைவர் முரளிகிருஷ்ணன், ஆராய்ச்சி பொறுப்பாளர்கள், பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் விளக்கினர்.
    இக் கண்டுபிடிப்பை ஊக்குவிக்கும் வகையில், கல்லூரித் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிப் பாராட்டினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai