சுடச்சுட

  

  விழுப்புரத்தில் இந்து ஐக்கிய பேரவை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை பாஜக மாநில இளைஞரணித் தலைவர் தொடங்கி வைத்தார்.
  இந்து ஐக்கிய பேரவையின் தேசியத் தலைவர் வி.சரவணன் தலைமை வகித்தார். இளைஞரணித் தலைவர் எஸ்.ரமேஷ் வரவேற்றார். செயலர் அர்ஜூன், மாவட்டத் தலைவர் ராஜேஷ், செயலர் சிவகுருநாதன், பொருளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  தமிழக பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜி செல்வம் சிறப்புரையாற்றி, விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். குருமிஷன் தலைவர் காடகனூர் இராமானுஜகுருஜி ஆசியுரை வழங்கினார். இந்து ஐக்கிய பேரவை மாநிலசி செயலர் கே.யோகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  மாலை 3 மணியளவில் தொடங்கிய விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை, கோலியனூர் வழியாக கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. விழுப்புரம் டிஎஸ்பி சுருளிராஜன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai