சுடச்சுட

  

  அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

  By கள்ளக்குறிச்சி,  |   Published on : 13th September 2016 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கள்ளக்குறிச்சி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் அ.பிரபு எம்.எல்.ஏ திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
   அங்கு, பணிபுரியும் தொழிலாளர்களின் நலன், தேவையான வசதிகள், பேருந்துகள் பராமரிக்கப்படும் விதம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
   அப்போது தொழிலாளர்கள், அடிப்படை வசதிகளான குளியலறைகள், கழிப்பறைகள், தங்குமிடம் ஆகியவை சரியான முறையில் இல்லை என புகார் தெரிவித்தனர். மேலும், பேருந்துகளைத் தினமும் சுத்தப்படுத்துவதே இல்லை எனவும், பேருந்துகளைக் சுத்தப்படுத்தும் இயந்திரம் பழுதடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
   பணிமனையில் குளியலறை, கழிப்பறை உள்ளிட்டவற்றை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டித்தருவதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.
   பணிமனை மேலாளர்கள் சிவசங்கரன், மணி, ஒன்றியக் குழுத் தலைவர் அ.ராஜசேகரன், நகர்மன்றத் தலைவர் எம்.பாபு, ஞானவேல், பால்ராஜ், பரியாஸ், பணிமனைத் தலைவர்கள் நடராஜன், அய்யாக்கண்ணு மற்றும் தொழிலாளர்கள், கட்சித் தொண்டர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai