Enable Javscript for better performance
கர்நாடக அரசை கண்டித்துப் போராட்டம்: விழுப்புரத்தில் தவாகவினர் 30 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக அரசை கண்டித்துப் போராட்டம்: விழுப்புரத்தில் தவாகவினர் 30 பேர் கைது

    By விழுப்புரம்,  |   Published on : 13th September 2016 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில், தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்வதைக் கண்டித்து விழுப்புரத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
     தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகத்தில் பல்வேறு அமைப்பினர் அங்கு வசிக்கும் தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
     இதனைக் கண்டித்து, விழுப்புரத்தில் திங்கள்கிழமை மாலை, தவாகவினர் மாநில துணைப் பொதுச்செயலர் ஆர்.ரவிஅலெக்ஸ், மாவட்டச் செயலர் ஆர்.குமரன் தலைமையில் கே.கே.ரோட்டில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவிரி நீர் திறந்து விட்டதற்காக, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருவோரைக் கண்டித்து கோஷமிட்டனர். அதன் மீது நடவடிக்கை எடுக்காத, முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையையும் எரித்தனர்.
     தகவல் அறிந்த விழுப்புரம் நகர காவல் ஆய்வாளர் சியாம்சுந்தர் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தவாகவினர் 30 பேரை கைது செய்து, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai