சுடச்சுட

    

    கர்நாடகத்தில், தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்வதைக் கண்டித்து விழுப்புரத்தில், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
     தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகத்தில் பல்வேறு அமைப்பினர் அங்கு வசிக்கும் தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
     இதனைக் கண்டித்து, விழுப்புரத்தில் திங்கள்கிழமை மாலை, தவாகவினர் மாநில துணைப் பொதுச்செயலர் ஆர்.ரவிஅலெக்ஸ், மாவட்டச் செயலர் ஆர்.குமரன் தலைமையில் கே.கே.ரோட்டில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
     காவிரி நீர் திறந்து விட்டதற்காக, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருவோரைக் கண்டித்து கோஷமிட்டனர். அதன் மீது நடவடிக்கை எடுக்காத, முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையையும் எரித்தனர்.
     தகவல் அறிந்த விழுப்புரம் நகர காவல் ஆய்வாளர் சியாம்சுந்தர் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தவாகவினர் 30 பேரை கைது செய்து, அருகிலுள்ள திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai