சுடச்சுட

    

    கார் மோதி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம்: வைகோ வழங்கினார்

    By உளுந்தூர்பேட்டை,  |   Published on : 13th September 2016 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உளுந்தூர்பேட்டை அருகே தனது கார் மோதியதில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு வைகோ திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறி, ரூ. 1 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார்.
     திருநாவலூர் ஒன்றியம், வண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராயர் மகன் சக்திவேல்(37). இவர், சனிக்கிழமை மாலை வயலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் சக்திவேல் மீது மோதியது. இதில் சக்திவேல் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
     பின்னர், விபத்துக்குக் காரணமான கார் மதிமுக பொதுச் செயலர் வைகோவினுடையது என்றும், அந்த காரில் அவருடைய உதவியாளர் சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
     உயிரிழந்த சக்திவேலுக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள். விவசாயி சக்திவேலுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரை வைகோ நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி, ரூ. 1 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார்.
     மேலும், இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் முழுத் தொகையும் கிடைக்க வழிவகை செய்வதாக உறுதியளித்ததோடு, சக்திவேலுவின் மகள்கள் மற்றும் மகனின் கல்விச் செலவை ஏற்பதாகவும் கூறினார்.
     மதிமுக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலரும், உளுந்தூர்பேட்டை பேரூராட்சித் தலைவருமான க.ஜெயசங்கர், நகரச் செயலர் க.செந்தில்குமார் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai