Enable Javscript for better performance
குறைகேட்பு நாள் கூட்டம்:  554 மனுக்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    குறைகேட்பு நாள் கூட்டம்:  554 மனுக்கள் வழங்கல்

    By விழுப்புரம்,  |   Published on : 13th September 2016 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 554 மனுக்கள் பெறப்பட்டன.
     வாரந்தோறும் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் தலைமை வகித்து பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
     முதியோர் ஓய்வூதியம், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 554 மனுக்கள் வரப்பெற்றன.
     மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு பரிந்துரைத்தார். அப்போது அவர், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
     கூட்டத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த திண்டிவனம் அருகேயுள்ள ஏப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சமும், கண் பார்வை இழந்த மார்ட்டீன் மகன் டெரனஸ் பாட்ரிக்பவுலுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய ஆணையும் வழங்கப்பட்டது.
     தனித்துணை ஆட்சியர் பத்ரிநாத், நேர்முக உதவியாளர் பொ.கிருபானந்தம், தணிக்கைத் துறை உதவி இயக்குநர் ஆனந்தன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அனந்தராமன், மாவட்ட ஊராட்சி செயலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai