சுடச்சுட

    

    குளிர்பானத்தில் பூச்சி: தட்டிக்கேட்ட தகராறில் 5 பேர் கைது

    By விழுப்புரம்  |   Published on : 13th September 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விக்கிரவாண்டி அருகே தனியார் உணவகத்தில் வழங்கிய குளிர்பானத்தில் பூச்சி இருந்ததை தட்டிக் கேட்ட தகராறில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
     விழுப்புரம், ஏழை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் மகன் சௌரவ்(23). தக்காத் தெருவைச் சேர்ந்த அப்துல்மஜித் மகன் முகமதுஅலி (32). இவர்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள தனியார் உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர்.
     பிறகு, குளிர்பானம் வாங்கியுள்ளனர். அதில் பூச்சி இறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்து, இது குறித்து உணவக ஊழியர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது, ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முகமது அலியின் நண்பர்களும், வந்து தட்டிக்கேட்டு ஊழியர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.
     இது தொடர்பாக, உணவக மேலாளர் வரதராஜ
     பெருமாள் (29) கொடுத்த தகவலின் பேரில், விக்கிரவாண்டி போலீஸார் விரைந்து வந்து விசாரித்தனர்.
     புகாரின் பேரில் சௌரவ், முகமதுஅலி, அவரது நண்பர்களான விக்கிரவாண்டியைச் சேர்ந்த அக்பர்அலி (36), சலீம்பாஷா (36), சபியுல்லா (33) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai