சுடச்சுட

  

  சங்கராபரணி ஆற்றுப் பாறையில் ராமர் பாதம் கண்டெடுப்பு

  By செஞ்சி,  |   Published on : 13th September 2016 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செஞ்சி, சங்கராபரணி ஆற்றுப் பாறையில் மிகவும் பழைமையான ராமர் பாதம், சங்கு, சக்கரம், திருநாமம், லட்சுமி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் மீது அமர்ந்துள்ள நிலையில் பெருமாள் உள்ளிட்ட சிற்பங்கள் ஒரே பாறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் கண்டெடுத்துள்ளனர்.
   செஞ்சி பகுதியில் சங்கராபரணி ஆற்றங்கரையின் அமைந்துள்ள கோதண்டராமர் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் இடத்தை கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிருஷ்ணதேவராய மன்னரால் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மிக்க கோயில் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. கோயில் ராஜகோபுரம் பாதி கட்டப்பட்டுள்ள நிலையில் உள்ளது.
   தற்போது கோயிலின் ஒரு பகுதியை மட்டும் புதுப்பித்து வருகின்றனர்.
   இந்நிலையில் கோயிலை புதுப்பிக்கும் பணியின்போது, அங்குள்ள சங்கராபரணி ஆற்றின் நடுவில் உள்ள ஒரு பெரிய பாறையில் ராமர் பாதம், சங்கு சக்கரத்துடன் கூடிய திருநாமம், இரண்டு பக்கமும் யானைகள் மலர் மாலையுடன் லட்சுமி தேவி, கருடாழ்வாரின் மீது அமர்ந்து சங்கு சக்கரத்துடன் காட்சி தரும் திருமால், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சிற்பங்கள் மிக நேர்த்தியாக ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளதைக் கண்டனர். அதில் வழிபாடு செய்வதற்கென்றே இரண்டு அகல் விளக்குகள் பாறையில் குடையப்பட்டுள்ளது.
   இது குறித்து கோயில் நிர்வாகி துரைரங்கராமானுஜதாசர் கூறுகையில், இது மிகவும் பழைமை வாய்ந்த கோயில். இந்தக் கோயிலில் 10 பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது. இந்த இடத்தை அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai