Enable Javscript for better performance
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    By உளுந்தூர்பேட்டை,  |   Published on : 13th September 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     வாலிபர் சங்க நகரத் தலைவர் மா.சிவகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவர் சங்க செயலர் பி.சின்னராசு வரவேற்புரையாற்றினார்.
     வாலிபர் சங்க நிர்வாகிகள் பி.ஆர்.நாராயணசாமி, இ.சந்தோஷ், ஏ.ராமராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் ஜெ.ஜெயக்குமார், மாணவர் சங்க மாவட்ட செயலர் எம்.சிவக்குமார், துணை செயலர் எம்.கே.பழனி, மாநிலக்குழு ஏ.சுபாஷினி, வாலிபர் சங்க நகரச் செயலர் சதீஷ்குமார், ஒன்றிய செயலர்கள் வி.மார்த்தாண்டன், பி.பத்மநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
     தாய்மொழிக் கல்வியை மறுத்தல், கல்வியைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து குரல் எழுப்பப்பட்டது. நகரப் பொருளர் டி.முருகன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai