Enable Javscript for better performance
தீவிர வாகனத் தணிக்கை- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவிலூர் நான்குமுனை சந்திப்பில் தீவிர வாகனத் தணிக்கையில் போலீஸார் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
     காவல் துணைக் கண்காணிப்பாளர் பா.கீதா உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த வாகனத் தணிக்கையின்போது, பதிவெண் பலகை இல்லாத வாகனங்களை நிறுத்தி, ஆவணங்களைத் தணிக்கை செய்து, எண் அச்சடித்து பொருத்தப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
     காவல் ஆய்வாளர் விஜயகுமார், விழுப்புரம் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆனந்தவேல், வெங்கட்ராகவன் ஆகியோர் முன்னிலையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தீபா, தலைமைக் காவலர் ஞானப்பிரகாசம், காவலர் சூர்யபிரகாஷ் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai