Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By திருக்கோவிலூர்,  |   Published on : 13th September 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருக்கோவிலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     திருக்கோவிலூரில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.முத்துவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலர் டி.ஏழுமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன், வட்டச் செயலர் சு.வேல்மாறன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
     திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சந்தப்பேட்டையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத உண்டு, உறைவிடப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும். இப்பள்ளியில் கடந்த 4-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த மாணவர்கள் அய்யனார், ராஜதுரை ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மாணவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     வட்டக் குழு உறுப்பினர்கள் பொன்.ராமகிருஷ்ணன், கே.சண்முகசுந்தரம், ஆர்.ராஜவேல், ஜீவா.ராஜா, உமாமகேஸ்வரி, வி.சின்ராசு, எம்.வீரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மு.செல்வராஜ் மற்றும் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
     கள்ளக்குறிச்சி...
     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனியமூர் கிளை சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலர் பி.பழனி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலர் டி.ஏழுமலை, அ.பா.பெரியசாமி உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
     கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் ஒன்றியம், கனியாமூர் ஊராட்சியில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கு ரூ. 22 லட்சத்தை 2013-ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்து, இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நடைபெறாததைக் கண்டித்தும், கட்டுமானப் பணியைச் செய்ய விடாமல் தடுக்கும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai