சுடச்சுட

    

    முறைகேடாக பட்டா வழங்கல்: ரத்து செய்ய கோரிக்கை

    By விழுப்புரம்  |   Published on : 13th September 2016 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்மலையனூர் அருகே கோயில் இடங்களில் தனி நபர்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
     இது குறித்து மேல்மலையனூர், செவலபுரை ஊராட்சித் தலைவர் சங்கர் தலைமையில் வந்த, 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விழுப்புரம் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: செவலபுரை கிராமத்தில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.
     கோயிலுக்கு பூஜை செய்ய வெளியூரிலிருந்து வந்த பூசாரிகள் திருவேங்கடம், லட்சுமண பாரதியார் ஆகியோருக்கு, கோயிலைச் சுற்றியுள்ள இடத்தில், அவர்கள் தங்குவதற்கு கிராம மக்கள் சார்பில் இடம் வழங்கப்பட்டது. அங்கு அவர்கள் குடியிருந்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் குடியிருந்து வரும் இடத்துக்கு, வருவாய்த் துறை மூலம், விதிகளை மீறி பட்டா வாங்கியுள்ளனர்.
     எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai