சுடச்சுட

  

  வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: திருக்கோவிலூர் வியாபாரிகள் கோரிக்கை

  By விழுப்புரம்  |   Published on : 13th September 2016 09:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருக்கோவிலூர் பேருந்து நிலைய கடைகளை அகற்ற வேண்டும் என்ற பேரூராட்சித் தலைவரின் நடவடிக்கையைக் கண்டித்து அப்பகுதி வியாபாரிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
   இது குறித்து, திருக்கோவிலூர் பேரூராட்சி கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமையில், விழுப்புரம் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவின் விவரம்: திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள 65 கடைகளை, 1987-முதல் வாடகைக்கு எடுத்து தொழில் நடத்தி வருகிறோம். கடைகளுக்கு முறையாக வாடகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2014-இல் பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்ட போது, பேருந்து நிலையத்துக்கு இடையூறு இல்லாமல் வெளிப் பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டன.
   இருந்தும் புதிய பேருந்து நிலையத்தைக் காரணம் காட்டி, பேரூராட்சி நிர்வாகம் கடந்தாண்டு எங்களை காலி செய்ய அறிக்கை அனுப்பியது. அப்போது இடையூறில்லாத நிலையைக் கூறி நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றோம். இந்த ஆணை தற்போதும் நிலுவையில் உள்ளது.
   புதிய பேருந்து நிலையத்தின் அருகே 6 கடைகள் மட்டுமே அமைந்துள்ளது, அதற்கு 5 அடி அளவில் மட்டுமே வழிவிட்டுள்ளனர்.
   இதனால், அங்கு கடைகளின் அளவைக் குறைத்து, அண்மையில் 10 அடி அளவில் அகலமாக வழிவிட்டு பாதை அமைத்துள்ளோம்.
   எவ்வித பாதிப்பும் இல்லாத நிலையில், திடீரென பேரூராட்சித் தலைவர், உறுப்பினர்கள் வந்து, கடைகளை அகற்ற வேண்டும் என்று ஆட்சியரிடம் பொய்யான தகவலைத் தெரிவித்து அண்மையில் மனு அளித்துள்ளனர்.
   இது குறித்து, நேரில் ஆய்வு செய்து, வியாபாரிகள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai