சுடச்சுட

    

    விநாயகர் சிலை கொட்டகைக்கு தீ வைப்பு: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

    By விழுப்புரம்,  |   Published on : 13th September 2016 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செஞ்சியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட கொட்டகைக்கு தீவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து மக்கள் கட்சியினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
     இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் ராஜா அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
     செஞ்சி அருகே கொத்தமங்கலம் சாலையில், அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
     அந்த வகையில் செப். 5-ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தி தினத்தில், அப்பகுதியில் 15 அடி உயர விநாயகர் சிலை வைத்து, மக்கள் வழிபட்டனர். அந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு மர்ம நபர்கள் சிலர் தீவைத்தனர். இதனால், விநாயகர் சிலை முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டது.
     இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai