Enable Javscript for better performance
வேன் மோதி விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி, வேன் மோதியதில் உயிரிழந்தார்.
     அய்யூர்அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு (47). விவசாயியான இவர், திங்கள்கிழமை திண்டிவனத்துக்கு பேருந்தில் சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பினார்.
     அய்யூர்அகரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, வீட்டுக்குச் செல்ல சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த வேன், அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
     இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai