சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பேருந்து-மினி லாரி மோதல்: திருநங்கை உள்பட இருவர் சாவு

    By உளுந்தூர்பேட்டை  |   Published on : 14th September 2016 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பேருந்து, மினி லாரி மோதிய விபத்தில் திருநங்கை உள்பட இருவர் உயிரிழந்தனர்.
     கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை உளுந்தூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தது.
     உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள காட்டுநெமிலி பகுதியில் பேருந்து வந்த போது மினி லாரி பேருந்து மீது மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த மங்கலம்பேட்டையைச் சேர்ந்த திருநங்கை சத்யா (28), மினி லாரி ஓட்டுநர் விருத்தாசலத்தைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (30) இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
     மேலும், பேருந்து ஓட்டுநர் அம்மாசி, பேருந்திலிருந்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அம்பிகா (42), மாலா (25), சிவக்குமார் (22), மஞ்சுளா (35) உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
     தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
     இவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
     உயிரிழந்த தாமரைச்செல்வன், திருநங்கை சத்யா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விபத்தால் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     விபத்து நிகழ்ந்த பகுதியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
     பின்னர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai