Enable Javscript for better performance
கர்நாடக வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

    By விழுப்புரம்,  |   Published on : 14th September 2016 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் வழியாகச் செல்லும் கர்நாடக மாநில வாகனங்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
     காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.
     இதைக் கண்டித்து, தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழகம் வழியாகச் செல்லும் கர்நாடக மாநில வாகனங்கள் பாதிப்பின்றி செல்ல நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
     வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக்கண்ணன் உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகள், எல்லைப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு போலீஸார் பாதுகாப்பு அளித்து மாவட்ட எல்லை வரை சென்று அனுப்பி வருகின்றனர். விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் டிஎஸ்பிக்கள் சுருளிராஜன், வெள்ளைச்சாமி தலைமையில் திங்கள்கிழமை இரவு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட எஸ்.பி. நரேந்திரன் நாயர் நேரில் வந்து பார்வையிட்டார். பெரம்பலூர் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட 3 கேஸ் டேங்கர் லாரிகளும், போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லை வரை அனுப்பப்பட்டன. சுழற்சி முறையில் இந்தப் பாதுகாப்புப் பணி நடைபெற்று வருகிறது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து மாவட்டங்களிலும், பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai