Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை: ஒன்றிய அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் பிரச்னை: ஒன்றிய அலுவலகம் முற்றுகை

    By திருக்கோவிலூர்,  |   Published on : 14th September 2016 09:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூர் அருகே குடிநீர் கோரி, கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
     திருக்கோவிலூரை அடுத்த சேரன்தாங்கல் கிராமத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லையாம்.
     இதுகுறித்து, ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டு பலன் இல்லாததால், இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, காலிக் குடங்களுடன் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
     போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜவேல், துரைசாமி, மேலாளர் சவரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
     இதனைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai