சுடச்சுட

    

    குர்பானிக்காக கொண்டு வரப்பட்ட ஒட்டகம் மீட்பு

    By விழுப்புரம்,  |   Published on : 14th September 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் அருகே பக்ரீத் பண்டிகையையொட்டி, குர்பானிக்காக கொண்டு வரப்பட்ட ஒட்டகத்தை போலீஸார் மீட்டனர்.
     தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையின் போது, குர்பானிக்காக ஒட்டகம் வெட்டுவதைத் தடை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுவாக, ஒட்டகத்தை வெட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
     இதையடுத்து, தமிழகத்தில் பக்ரீத் பண்டிகைக்காக ஒட்டகங்கள் வாங்கப்பட்டுள்ளதா? என போலீஸார் கண்காணித்து வந்தனர்.
     விழுப்புரம் மாவட்டம், காணை பகுதியைச் சேர்ந்த அமீர்அப்பாஸ் என்பவர் பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக ஒட்டகத்தை வாங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது வீட்டுக்கு திங்கள்கிழமை சென்ற காணை போலீஸார், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை மீட்டனர்.
     விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.90 ஆயிரம் மதிப்பில் வாங்கப்பட்ட அந்த ஒட்டகம் ரூ.50 ஆயிரம் செலவு செய்து கொண்டுவரப்பட்டது. காணை பகுதியில் செவ்வாய்க்கிழமை குர்பானி கொடுப்பதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த ஒட்டகத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த ஒட்டகத்தை அங்குள்ள ஒரு திருமண மண்டபம் அருகே கட்டி வைத்து போலீஸார் பாதுகாத்து வருகின்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai